திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை -5 பெண் குழந்தைகளின் தாய் விபரீத முடிவு; மிரட்டியவர்கள் பற்றி கலெக்டருக்கு கடிதம்


5 பெண் குழந்தைகளின் தாயான இளம்பெண், ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை மிரட்டியவர்கள் பற்றி அந்த பெண் கலெக்டருக்கு எழுதிய கடிதம் சிக்கியது.

மதுரை

திருமங்கலம்

5 பெண் குழந்தைகளின் தாயான இளம்பெண், ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை மிரட்டியவர்கள் பற்றி அந்த பெண் கலெக்டருக்கு எழுதிய கடிதம் சிக்கியது.

குழந்தைகளுடன் பயணித்த பெண்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருேக மையிட்டான்பட்டி கிராமம் உள்ளது. நேற்று அந்த ஊரில் இருந்து பகல் 11.30 மணி அளவில் ஒரு டவுன் பஸ், மதுரை பெரியார் நிலையம் நோக்கி புறப்பட்டது.

அந்த பஸ்சில் சுமார் 25 பேர் இருந்தனர். அந்த பஸ்சில் மையிட்டான்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய, 2 பெண் குழந்தைகளுடன் ஏறினார். கண்ணீர் ததும்ப மிகவும் சோகமாக காணப்பட்ட அந்த பெண், ஒரு இருக்கையில் குழந்தைகளுடன் அமர்ந்து இருந்தார். அந்த பஸ் சிவரகோட்டை அருகே அனுமன் கோவில் பகுதியில் வந்தது.

ஓடும் பஸ்சில் இருந்து குதித்தார்

தனக்கு அருகில் இருந்தவர்களிடம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு, சட்டென்று முன்புற வாசல் பகுதிக்கு வந்த பெண், ஓடும் பஸ்சில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் குதித்துவிட்டார்.

இதைபார்த்ததும் பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அலறினார்கள். பஸ் உடனே நிறுத்தப்பட்டது.

எல்லோரும் கீழே இறங்கி பதறியபடி ஓடிவந்து பார்த்தார்கள். படுகாயத்துடன் சாலையில் ரத்தவெள்ளத்தில் அந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

பரிதாப சாவு

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. கள்ளிக்குடி போலீசாரும் விரைந்து வந்தனர்.

உயிருக்கு போராடிய அந்த பெண்ணை, ஆம்புலன்சில் ஏற்றியபோது தாயின் நிலையை பார்த்து அந்த 2 பெண் குழந்ைதகளும் கதறின. ைமயிட்டான்பட்டியை சேர்ந்த வேறு 2 பேர் அந்த பஸ்சில் பயணித்து வந்ததால், குழந்தைகளை அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு ஆம்புலன்சு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. ஆனால், அந்த பெண் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால், சற்று நேரத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

5 பெண் குழந்தைகளின் தாய்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கான பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

சற்று நேரத்தில் அந்த பெண் பற்றிய விவரம் தெரியவந்தது. அவரது பெயர் நாகலட்சுமி (வயது 31). இவருடைய கணவர் கணேசன். கோவையில் ஒரு நிறுவனத்தில் பிட்டராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்சினி (10), தேன்மொழி (8), சண்முகப்பிரியா (5), பாண்டி சிவானி (3) என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ேகாவையில் இருந்து அவ்வப்போது கணேசன் ஊருக்கு வந்து மனைவி, மகள்களை பார்த்துச் செல்வார். சில நாட்களுக்கு முன்பு வந்திருந்த அவர் தற்போது ஊரில்தான் இருந்து வந்தார்.

நாகலட்சுமி 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தங்கள் கிராமத்தில் 100 நாள் வேலைதிட்ட பணித்தள பொறுப்பாளராக அவர் 1½ ஆண்டாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மிரட்டல்

இந்த நிலையில் அந்த பணிக்கு வரக்கூடாது என அவருக்கு சமீபகாலமாக தொந்தரவுகள் இருந்துவந்ததாக தெரிகிறது. குறிப்பாக மையிட்டான்பட்டி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 2 பேரும், ஊராட்சி செயலர் முத்துவும் இந்த பணிக்கு நீ வரக்கூடாது, அந்த பணியை உனக்கு தர முடியாது என மிரட்டினராம்.

இதுகுறித்து நாகலட்சுமி ஏற்கனவே கள்ளிக்குடி போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரியவருகிறது. எனவே அந்த 3 பேரும் சேர்ந்து மீண்டும் நாகலட்சுமியிடம்,, போலீசில் புகார் அளித்தது பற்றி அவதூறாக பேசி தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி நேற்று கலெக்டரிடம் புகார் அளிக்க வேண்டும் என நினைத்து ஊரில் இருந்து நாகலட்சுமி புறப்பட்டுள்ளார். மூத்த 3 மகள்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு, சண்முகப்பிரியா, பாண்டிசிவானி ஆகிய குழந்தைகளை தன்னோடு அழைத்துக்கொண்டு, தங்கள் ஊரில் இருந்து திருமங்கலம் வழியாக மதுரை பெரியார் நிலையம் வரும் பஸ்சில் ஏறி பயணித்துள்ளார். வரும் வழியில்தான், இந்த விபரீத முடிவு எடுத்து ஓடும் பஸ்சில் இருந்து நாகலட்சுமி குதித்து உயிரைவிட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

கலெக்டருக்கு கடிதம்

மேலும் நாகலட்சுமி கைப்ைபயில், கலெக்டருக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் மீட்டுள்ளனர். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அன்புள்ள கலெக்டர் ஐயா அவர்களுக்கு,

ைமயிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய என்னை கலெக்டர்தான் நியமித்தார். ஆனால், அந்த வேலையை எனக்கு கொடுக்கமாட்ேடன் என்று அந்த ஊர் வார்டு மெம்பர் வீரக்குமார் மற்றும் பாலமுருகன், கிளார்க் (ஊராட்சி செயலர்) முத்து ஆகியோர் என்னை மிகவும் தவறாக பேசினார்கள். நான் கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இதுபற்றி புகார் அளித்தேன். இதை அறிந்து ஏன் புகார் கொடுத்தாய் என்று திட்டி தற்கொலை முயற்சிக்கு தூண்டினர். எனக்கு 5 பெண் குழந்தைகள். ஆதலால், எனக்கு வேலை கேட்டது தவறா? மேற்கண்ட 3 பேரும் என்னை வேலையைவிட்டு விலகும்படி கூறினார்கள். அப்படி என்றால், அவர்களையும் வேலையில் இருந்து நீக்க வேண்டும். என் தற்கொலை முயற்சிக்கு அவர்கள்தான் முக்கிய காரணம். அவர்கள் என்னை அடிக்க கைஓங்கி அசிங்கப்படுத்திவிட்டார்கள்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்கண்ட பாலமுருகனின் மனைவி நாகரத்தினம், பஞ்சாயத்து துணை தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் 5 பெண் குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கிறார்கள்.

கூடுதல் கலெக்டர் விசாரணை

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் கூறியதாவது:-

நாகலட்சுமி, கடந்த 3 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் தனக்கு பணித்தள பொறுப்பாளர் பணி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். அவருக்கு இந்த பொறுப்பு வழங்குவது குறித்தும், அவரது பணி தகுதி குறித்தும் ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன். நாகலட்சுமி மரணம் தொடர்பாக ஊராட்சி செயலர் மற்றும் கவுன்சிலர்கள் தவறு செய்து இருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக கூடுதல் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story