வரி வசூல் செய்த ஊழியரை தாக்கிய வாலிபர்


வரி வசூல் செய்த ஊழியரை தாக்கிய வாலிபர்
x

சோளிங்கரில் வரி வசூல் செய்த ஊழியரை தாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் வீட்டு வரி, குடிநீர் வரி வசூலிக்க நகராட்சி ஆணையர் பரந்தாமன் உத்தரவின்பேரில் வரிதண்டலர் மற்றும் பணியாளர்கள் சென்றனர். தக்கான்குளம் அருகே அரக்கோணம் சாலையில் வரிவசூல் செய்தபோது பார்வதி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தவில்லை, வீட்டு வரியை கட்டவேண்டும் எனவும், நகராட்சி அனுமதி பெறாமல் குடி நீர் இணைப்பு செய்யபட்டுள்ளதையும் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பார்வதி வரிதண்டலர் மற்றும் தூய்மை பணியாளர் ஆறுமுகத்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் தக்கான்குளம் அருகே சென்றபோது பார்வதி மகன் குமார் (35) என்பவர், தூய்மை பணியாளர் ஆறுமுகத்தை தாக்கி உள்ளார். இதில் ஆறுமுகம் கீழே விழுந்து காயமடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து நகராட்சி ஆணையர் பரந்தாமன் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.


Next Story