பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து வாலிபர் தற்கொலை
பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியப்பனின் மகன் மாது(வயது 32). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வி(29) என்பவரை திருமண செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, செந்தமிழ்செல்வி தனது தந்தையுடன் வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாது அங்கு வந்து செந்தமிழ்செல்வியை சமாதானப்படுத்தி, குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால் செந்தமிழ்செல்வி வர மருத்துள்ளார்.
இதில் மனமுடைந்த மாது யாரும் இல்லாத நேரத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.