அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து வாலிபர் பலி


அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து வாலிபர் பலி
x

மன்னார்குடியில் பெய்த பலத்த மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து வாலிபர் உயிரிழந்தார்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் பெய்த பலத்த மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து வாலிபர் உயிரிழந்தார்.

கோடை வெயில்

மன்னார்குடியை அடுத்த மேலவாசல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்த விவசாயி உத்திராபதி மகன் மாதவன் (வயது 27). நேற்று மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் மழை பெய்த போது வீட்டில் இருந்த மாதவன், மழை விட்ட பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது.இதை கவனிக்காத மாதவன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.

திடீர் மழை

அப்போது மாதவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து பலியானார்

கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் வாலிபர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மேலவாசல் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Related Tags :
Next Story