சாலை விபத்தில் வாலிபர் பலி


சாலை விபத்தில் வாலிபர் பலி
x

பெண்ணாடத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த கூடலூர் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணிவேல் (வயது 28). இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கூடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெண்ணாடம் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், மணிவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கீழே விழுந்த மணிவேல் மீது அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த லாரியின் சக்கரம் ஏறியது. இதில் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எதிரே வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இறையூரை சேர்ந்த சுந்தரம் மகன் அரவிந்தன் (23) என்பவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதுகுறித்து பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக பெண்ணாடம்-திட்டக்குடி சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story