விபத்தில் வாலிபர் பலி
அருப்புக்கோட்டை அருேக விபத்தில் வாலிபர் பலியானார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பெரிய தும்மகுண்டு பகுதியை சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 22). இவர் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டைக்கு வந்தார். அப்போது செங்கட்டான் ஊருணி அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அழகு முத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் ஆத்திபட்டியை சேர்ந்த ஆனந்தபாபு (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story