மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் பலி
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் பலியானார்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் பலியானார்.
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடி தோப்புதெருவில் வசிப்பவர் பழனி. அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சாந்தகுமார் (வயது 18), பிளஸ்-2 முடித்துள்ளார். அவர் கல்லூரியில் சேருவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
நேற்று காலை 9 மணியளவில் அருகில் உள்ள சோ.புதூரில் பெட்ரோல் பங்கில் மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சாந்தகுமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போதுஎதிர்ப்புறமாக புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த கண் மருத்துவமனையைச்சேர்ந்த பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் உடல் நசுங்கிய நிலையில் சம்பவஇடத்திலேயே சாந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சாந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.