ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு
ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு
வல்லம் அருகே ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் சாவு
தஞ்சை அருகே உள்ள ஏழுபட்டியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சுரேஷ் (வயது 26). நேற்றுமுன்தினம் இவர் வல்லம் அருகே உள்ள குருவாடிப்பட்டி கல்லணை கால்வாய் பகுதியில் புது ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதில் சுரேஷ் ஆற்றில் தவறி விழுந்தார். இதனை பார்த்த அருகில் இருந்த தொழிலாளிகள் ஆற்றில் இறங்கி சுரேசை தேடினர். அப்போது அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
விசாரணை
தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.