கழிவுநீர் கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்


கழிவுநீர் கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்
x

கழிவுநீர் கால்வாயில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

திருச்சி

திருச்சி பொன்மலை மேல அம்பிகாபுரம் டாஸ்மாக் கடை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 36) என்பதும், எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்த இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அவர் மது குடிக்க வந்ததும் தெரியவந்தது. இதனால், அவர் மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story