கயத்தாறு அருகே 30 அடி பள்ளத்தில் விழுந்த காரில் உயிர் தப்பிய வாலிபர்


கயத்தாறு அருகே 30 அடி பள்ளத்தில் விழுந்த காரில் இருந்த வாலிபர் உயிர் தப்பினார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

நெல்லை டவுன் முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் இருந்து நெல்லைக்கு காரில் சென்றார். கயத்தாறு அருகே சுமார் 10 மணியளவில் நாற்கர சாலையில் திடீரென்று நிலைதடுமாறிய கார் சாலையோரத்திலுள்ள 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது அங்கு இருந்த இரும்பு மின்கம்பம் மீது மோதியதில் மின்கம்பம் வளைந்து, உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சார இணைப்பை துண்டித்து, மின்கம்பிகளை சரிசெய்தனர். பள்ளத்தில் காருக்குள் பலத்த காயங்களுடன் கிடந்த முருகனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளத்திலிருந்த உருக்குலைந்து கிடந்த காரும் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story