கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
கலவை அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், பூட்டுதாக்கு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் ஆகிய இருவரும் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பினர். சொரையூர்கூட்டுரோட்டில் இரவு 11.30 மணி அளவில் வந்தபோது, அவர்களை வாழப்பந்தல் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மகன் விமல் ராஜ் (வயது 25) வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளார். இது குறித்து மணிகண்டன், மகேஷ் ஆகிய இருவரும் வாழப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் புகார் வழக்குப்பதிவு செய்து விமல் ராஜை நேற்று கைது செய்தார்.
Related Tags :
Next Story