முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை


முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வாலிபர் படுகொலை

ராமநாதபுரம் அருகே அழகன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன்(வயது 26). அதே ஊரை சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகன் கூலு என்கிற குமார். காளீஸ்வரனுக்கும், குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று இரவு குமார், காளீஸ்வரனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் குவிப்பு

காளீஸ்வரன் இறந்ததை அறிந்ததும் அவரது உறவினர்கள், அவரை கொலை செய்த குமாரை கைது செய்யக்கோரி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். தலைமறைவான குமாரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story