ஆரணியில் வாலிபர் கஞ்சா விற்பனை தகராறில் வெட்டிக்கொலை


ஆரணியில் வாலிபர் கஞ்சா விற்பனை தகராறில் வெட்டிக்கொலை
x

ஆரணியில் கஞ்சா வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

வெட்டிக்கொலை

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஆரணி இருளர் காலனியில் வசித்து வந்தவர் சின்னமணி (வயது 30). இவர் ஆரணியில் உள்ள பழைய தியேட்டர் அருகே டிபன் கடை ஒன்றை நடத்தி வந்தார். மேலும், கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பெரியபாளையம் தண்டுமாநகர் பகுதியை சேர்ந்த சரத் (21) மற்றும் மாரிமுத்து ஆகியோர் கஞ்சா வாங்குவது தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சின்னமணி வீட்டிற்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்னமணியை வெட்ட முயன்றதாக தெரிகிறது. அதில், சின்னமணி சுதாரித்துக் கொண்டு தன்னிடம் இருந்த கத்தியால் சரத் மற்றும் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயம் அடைந்த சரத் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மாரிமுத்து வெட்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கைது

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி போலீசார் விரைந்து வந்தனர். மேலும், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்து கொலை வழக்கில் சின்னமணியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், பலியான சரத் உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story