தூத்துக்குடி: சுயேச்சை கவுன்சிலர் கணவர் வெட்டிக்கொலை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


தூத்துக்குடி: சுயேச்சை கவுன்சிலர் கணவர் வெட்டிக்கொலை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 July 2022 4:02 PM IST (Updated: 12 July 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சுயேச்சை கவுன்சிலர் கணவரை பைக்கில் வந்த மர்மநபர்கள் 3 பேர் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் இன்று காலை 8 மணி அளவில் டீ குடிக்க வந்துள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் 3 பேர் பைக்கில் வந்து சரவணகுமாரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சரவணகுமார் இறந்தார். இது சம்பந்தமாக குரும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சரவணகுமாருக்கு மனைவி மரிய நிர்மலா தேவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் மனைவி ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில்14-வது வார்டு கவுன்சிலராக சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். பின்னர் திமுகவில் இணைந்தார்.

கடந்த 2019 நவம்பரில் இவரது தம்பி குமாரை சிலர் கொலை செய்ததாக தெரிகிறது. இதுவும் இவரது கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுபோக கொலைக்கு வேறு ஏதும் காரணமா என போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story