லாரி மோதி வாலிபர் பலி


லாரி மோதி வாலிபர் பலி
x

லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்.

அரியலூர்

வி.கைகாட்டி:

வி.கைகாட்டியை அடுத்த பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன்(வயது 30). டிரைவரான இவர், வி.கைகாட்டி அருகில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் ஜோசியம் பார்த்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் அவர் நிலைதடுதாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த மற்றொரு டிப்பர் லாரியின் சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்த திருமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார், திருமுருகன் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story