ஓட்டல் உரிமையாளரை தாக்கிய வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை


ஓட்டல் உரிமையாளரை தாக்கிய வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை
x

தக்கலை அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கிய வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கிய வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஓட்டல் உரிமையாளர்

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறையை ேசர்ந்தவர் கென்னடி (வயது55). இவர் சாமியார்மடத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு 18-4-2013 அன்று இரவு 10.45 மணிக்கு வீயன்னூரை சேர்ந்த பினுகுமார் (38) என்பவர் சாப்பிட சென்றார்.

அவர் சாப்பிட்ட பின்பு அதற்கான பில் தொகை ரூ.90 யை கொடுக்காமல் சென்றார். இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் கென்னடி அவரிடம் பணத்தை கேட்டார். அதற்கு அவர் 'நான் ஒரு ரவுடி என்னிடம் பணம் கேட்கிறாயா?'' என கேட்டு அருகில் கிடந்த விறகு கம்பால் கென்னடியின் தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த கென்னடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

ஒரு ஆண்டு சிறை

இந்த சம்பவம் தொடர்பாக கென்னடி அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பினுகுமாரை கைது செய்தனர். இது சம்மந்தமான வழக்கு பத்மநாபபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த பத்மநாபபுரம் குற்றவியல் நீதிபதி பிரவின் ஜீவா, நேற்று பினு குமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story