வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது


வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2022 1:15 AM IST (Updated: 18 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டி அருகே வீடு புகந்து செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:-

கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 26). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாகுல் அமீது இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, உள்ளே புகுந்த ஒரு வாலிபர், சாகுல் அமீதுவின் செல்போனை திருடிச்சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய அதே பகுதியை சேர்ந்த பூபதி (27) என்பவரை கைது செய்தனர்.


Next Story