ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்து செவிலியர் முகத்தில் கடித்த வாலிபர்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்து செவிலியர் முகத்தில் வாலிபர் கடித்தார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாலையில் வாலிபர் ஒருவர் புகுந்தார். பின்னர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். மருந்து, மாத்திரைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டார்.
அப்போது ஓய்வு அறையில் இருந்து வெளியே வந்த செவிலியரின் முகத்தில் அந்த நபர் திடீரென கடித்தார். இதனால் அந்த செவிலியர் அலறினார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்த செவிலியரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story