பெட்ரோல் ஊற்றி தாயை எரித்துக்கொன்ற வாலிபர் கைது


பெட்ரோல் ஊற்றி தாயை எரித்துக்கொன்ற வாலிபர் கைது
x

பெட்ரோல் ஊற்றி தாயை எரித்துக்கொன்ற வாலிபர் கைது

தஞ்சாவூர்

ஒரத்தநாடு

பட்டுக்கோட்டை அருகே பெட்ரோல் ஊற்றி தாயை எரித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உறவினர் வருகைக்கு எதிர்ப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பட்டுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணி புரிந்து வருகிறார்.

இவரது மனைவி தையல்நாயகி(வயது 43). இவர்களுக்கு கந்தவேல்(23) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி தையல்நாயகி மற்றும் மகன் கந்தவேல் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களது வீட்டிற்கு தையல்நாயகியின் உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதற்கு கந்தவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

இது தொடர்பாக தையல்நாயகிக்கும் அவரது மகன் கந்தவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. தனது தாய் மீது கந்தவேல் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

நேற்று காலை தையல்நாயகி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது தனது தாய் மீது ஆத்திரத்தில் இருந்த கந்தவேல் தன்னை பெற்ற தாய் என்றும் பாராது அவர் மீது கந்தவேல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த தையல்நாயகி அலறியபடி வீட்டை விட்டு வெளியே வந்து துடி துடித்து உயிருக்கு போராடினார்.

அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தையல்நாயகி பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து கந்தவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பெற்ற தாயை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story