வங்கியில் போலி நகையை அடகு வைக்க வந்த வாலிபருக்கு அடி-உதை


வங்கியில் போலி நகையை அடகு வைக்க வந்த வாலிபருக்கு அடி-உதை
x

நாகர்கோவிலில் வங்கியில் போலி நகையை அடகு வைக்க வந்த வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் வங்கியில் போலி நகையை அடகு வைக்க வந்த வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலி நகை

நாகர்கோவில் சரலூரில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று முன்தினம் காலையில் ஒரு வாலிபர் வந்தார். அவர் வங்கியில் நகையை கொடுத்து அடகு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நகையை பார்த்ததும் வங்கி ஊழியர்களுக்கு சந்தேகம் வந்தது. அதைத் தொடர்ந்து அதை பரிசோதித்த போது அந்த நகை போலியானது என்பது தெரியவந்தது.

உடனே சம்பந்தப்பட்ட வாலிபரை வங்கி ஊழியர்கள் கண்டித்தனர். அப்போது வங்கியில் கூடியிருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து, போலி நகையை கொண்டு வந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்ததோடு, அவரை கம்பத்தில் கட்டி வைத்தனர். ஆனால் அப்போதும் அந்த வாலிபர் எதுவும் தெரியாதது போல அழுது கொண்டிருந்தார்.

மனநலம் பாதிப்பு

இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த வாலிபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. ஏதோ கவரிங் நகையை கையில் வைத்துக் கொண்டு அடகு வைக்கப்போவதாக கூறி வந்துள்ளார்.

ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியாமல் பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரின் நிலையை அறிந்த பொதுமக்கள் தாக்கியதற்கு மிகவும் வருந்தினர். இதைத் தொடர்ந்து வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story