நாதஸ்வர பயிற்சி பெற வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


நாதஸ்வர பயிற்சி பெற வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆரணி அருகே வித்வான் வீட்டில் நாதஸ்வர பயிற்சி பெற வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே வித்வான் வீட்டில் நாதஸ்வர பயிற்சி பெற வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாதஸ்வர பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியை சேர்ந்தவர் சண்முகம். பிரபல நாதஸ்வர வித்வான். இவர் திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சலூன் தொழிலாளி கணேசன் மகன் மகன் நாகராஜ் (வயது 16), ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் காட்பாடியை சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு நாதஸ்வர பயிற்சி வழங்கி வருகிறார்.

நாகராஜிடம் ஒரு இளம் பெண் தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு வந்ததாகவும் அவரிடம் நாகராஜ் காதல் வலையில் வீழ்ந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகத்தின் வீட்டில் உள்ள கழிப்பறைக்கு நாகராஜ் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. அங்கிருந்தவர்கள் கதவை தட்டியும் நாகராஜ் கதவை திறக்கவில்லை.

தூக்கில் தொங்கினார்

இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து நாகராஜின் தந்தை கணேசனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ஆரணி தாலுகா போலீசில் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் காதல் பிரச்சினையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நாகராஜின் செல்போனில் பேசிய பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story