நடந்து சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்


நடந்து சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்
x

காட்பாடி காந்தி நகரில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

காட்பாடி கிளித்தான்பட்டரையை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி திலகா (வயது 29). இவர் நேற்று மாலை காந்திநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் இவருடன் பேசிக்கொண்டு இருந்தார். திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் வைத்திருந்த பிளேடால், திலகாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து விருதம்பட்டு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சென்று திலகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கழுத்தை அறுத்த வாலிபர் யார், எதற்காக கழுத்த அறுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story