தெருவில் நடனமாடிய வாலிபர் கைது
சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் ஆடை இல்லாமல் தெருவில் நடனமாடிய வாலிபர் கைது
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல் மகன் சின்ன கருப்பசாமி (வயது 23). கூலி தொழிலாளி. சின்ன கருப்பசாமி அடிக்கடி பாட்டை சத்தமாக வைத்துக்கொண்டு மது போதையில் ஆடை இல்லாமல் தெருவில் நடனம் ஆடிக் கொண்டிருந்தாராம். இதனை ஊரை சேர்ந்த முனீஷ்குமார் மனைவி சர்மிளா (22) மற்றும் பெண்கள் தட்டி கேட்டனர். அதற்கு பெண்களை அவதூறாக பேசி பீர்பாட்டிலை காட்டி கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் சர்மிளா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன கருப்பசாமியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story