வேனில் மயங்கி விழுந்த வாலிபர் சாவு


வேனில் மயங்கி விழுந்த வாலிபர் சாவு
x

வேனில் மயங்கி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வெள்ளாங்குழியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான வேனை பெயிண்டிங் வேலைக்காக மதுரைக்கு அனுப்பி இருந்தார். வேலை முடிந்த நிலையில் வேனை எடுப்பதற்காக தனது நண்பரான நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த மதன் (30) என்பவரையும் அழைத்துச் சென்றார். வேனில் இருவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது விருதுநகர்-சாத்தூர் இடையே ஆர்.ஆர். நகரில் 2பேரும் உணவருந்தினர். பின்னர் மீண்டும் வேனில் ஏறி ஊருக்கு புறப்பட்டபோது இருக்கையில் அமர்ந்திருந்த மதன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக நாராயணன் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு மதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story