போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது


போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது
x

பேட்டையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக முத்துகிருஷ்ணன் (வயது 41) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பேட்டை செக்கடி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மதுபோதையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அவரை பிடித்து முத்துகிருஷ்ணன் விசாரணை நடத்தியபோது, சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கொம்பையா என்பவரது மகன் சங்கர் (33) என்பவர் முத்துகிருஷ்ணரிடம் எனது நண்பரை எப்படி நீங்கள் பிடித்து விசாரணை செய்யலாம் என்று தகராறு செய்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தார்.

1 More update

Next Story