திருச்செந்தூரில் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபரால் பரபரப்பு


திருச்செந்தூரில் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபரால் பரபரப்பு
x

திருச்செந்தூரில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் நடுரோட்டில் நேற்று வாலிபர் ஒருவர் தனது உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் நடுரோட்டில் நேற்று வாலிபர் ஒருவர் தனது உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடும்ப தகராறு

திருச்செந்தூர் அருகே உள்ள காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ஐகோர்ட் சுடலை என்பவருடைய மகன் காசித்துரை (வயது 27). இவருடைய மனைவி சங்கீதா (25). இவர்களுக்கு திருமணம் முடிந்து சுமார் 8 ஆண்டுகள் ஆகிறது. அஸ்மிதா (7), வனபார்வதி (6) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தனர். காசிதுரை தனியார் நிறுவனத்திலும், சங்கீதா சூப்பர் மார்க்கெட்டிலும் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, சங்கீதா தனது கணவனை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காசித்துரை தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். அவரது குழந்தைகளை காசித்துரையின் பெற்றோர்கள் கவனித்து வருகின்றனர்.

தீக்குளிப்பு

இந்நிலையில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் காசித்துரை நேற்று மதியம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகே தனது உடலில் டீசல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பின்னர் காசித்துரையை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் தீக்குளித்த சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story