துபாயில் இருந்து சென்னைக்கு ஆடையில் மறைத்து ரூ.86 லட்சம் தங்கத்தை கடத்திய வாலிபர்


துபாயில் இருந்து சென்னைக்கு ஆடையில் மறைத்து ரூ.86 லட்சம் தங்கத்தை கடத்திய வாலிபர்
x

துபாயில் இருந்து சென்னைக்கு ஆடையில் மறைத்து கடத்திய ரூ.86 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

ரூ.86 லட்சம் தங்கம்

அப்போது அவர் அணிந்து இருந்த ஆடையில் ரகசிய அறையில் 3 தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.86 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 774 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், தங்கம் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story