லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது


லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
x

நாட்டறம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெலக்கல்நத்தம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த நந்தியப்பன் (வயது 30) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story