பேச மறுத்த காதலியை, கத்தியால் குத்திய வாலிபர் கைது
பேச மறுத்த காதலியை கழுத்தில் கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேச மறுத்த காதலியை கழுத்தில் கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கத்தியால் குத்தினார்
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
சதீஷ்குமார், தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். அந்த மாணவி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு மாணவியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் மகளை கண்டித்தனர். இதனால் அந்த மாணவி கடந்த சில மாதங்களாக சதீஷ்குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருவலத்தில் உள்ள பஜார் வழியாக அந்த மாணவி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த சதீஷ்குமார் மாணவியிடம் ஏன் என்னிடம் பேசமறுக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த மாணவி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கைது
இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் உடனடியாக சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நர்சிங் கல்லூரி மாணவியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.