பெண்ணின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கிய வாலிபர் கைது


பெண்ணின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கிய வாலிபர் கைது
x

பெண்ணின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே தேக்காட்டூர் பகுதியை சேர்ந்த சண்முகத்தின் மனைவி அம்பிகா (வயது 32). இவரது கணவர் சண்முகம் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். இதேபோல் அரியலூரை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவர் சண்முகத்துடன் சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவரது குடும்பத்தினருடன் நட்புடன் பிரபாகரன் பழகியிருக்கிறார். இந்த நிலையில் சொந்த ஊர் வந்த பின்பும் அம்பிகாவுடன் குடும்ப நண்பரை போல் பழகிவந்தார். இதற்கிடையில் அம்பிகாவின் புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் போலி கணக்கை பிரபாகரன் தொடங்கியுள்ளார். மேலும் அதில் அவரது வாட்ஸ்-அப் எண்ணையும் குறிப்பிட்டார். இதனால் அம்பிகாவின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. மேலும் அவரது புகைப்படத்தை பரப்பாமல் இருப்பதற்காக அம்பிகாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் மூலம் அம்பிகா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பிரபாகரனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story