மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிக்கினார்


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிக்கினார்
x

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ஜோதிபுரம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி (வயது 46). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி தனது வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (21) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை மீட்டனர்.


Next Story