பொது மக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது


பொது மக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது
x

அரக்கோணத்தில் பொது மக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று பழனிபேட்டை, கிருஷ்ணாம்பேட்டை மற்றும் வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கடேசபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் உருட்டுக்கட்டை வைத்துக்கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கரன் (வயது 21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story