சமூக வலைத்தளத்தில் அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர் சிக்கினார்


சமூக வலைத்தளத்தில் அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர் சிக்கினார்
x

நெல்லை அருகே சமூக வலைத்தளத்தில் அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர் சிக்கினார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூர் மேல தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் நாகராஜ் (வயது 20). இவர் சமூக வலைத்தளமான முகநூலில் அரிவாளை காட்டி இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story