வழிப்பறியை தடுக்க முயன்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு பிரபல ரவுடி கைது


வழிப்பறியை தடுக்க முயன்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு  பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பறக்கை அருகே வழிப் பறியை தடுக்க முயன்ற வாலிபரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடியை ேபாலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

பறக்கை அருகே வழிப் பறியை தடுக்க முயன்ற வாலிபரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடியை ேபாலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வழிப்பறி முயற்சி

நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளைதர்மம் சுடலை கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி அபிஷா (வயது 21). இவர் பறக்கையில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் தினேஷ்குமார் மனைவி அபிஷாவை வங்கியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக உறவினரின் காரில் வந்தார். அவர் பறக்கை அருகே உள்ள வடக்கு செட்டித்தெரு பகுதியில் மனைவியின் வருகைக்காக காத்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற பறக்கை மணிகண்டன் (37) அங்கு வந்து தினேஷ்குமாரிடம் ரூ.5 ஆயிரம் கேட்டு வண்டியின் சாவியை எடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அபிஷா சாவியை கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் மணிகண்டன் பேசினார்.

அரிவாள் வெட்டு

இதை அங்கு வந்த தேரூரை சேர்ந்த இந்திரகுமார் (36) என்பவர் தட்டிக்கேட்டு வழிப்பறியை தடுத்தார். உடனே மணிகண்டன் அரிவாளால் இந்திரகுமாரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இந்திரகுமார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மேலும் மணிகண்டன் அரிவாளை காட்டி அபிஷாவை மிரட்டி, காரை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து அபிஷா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் ஆகியோர் மணிகண்டன் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ரவுடிகள் பட்டியலில்...

மணிகண்டன் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பலமுறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story