மது போதையில் ரகளை செய்த வாலிபர்


மது போதையில் ரகளை செய்த வாலிபர்
x

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுபோதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பஸ் நிலையத்தை சுற்றிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதனால் அங்கு மது குடித்து விட்டு பஸ் நிலையத்துக்குள் வந்து போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில், பஸ் நிலையத்தில் திருச்சி பஸ்கள் நிற்கும் பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டார். பஸ்களை மறிப்பதும், தட்டி கேட்கும் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்வதுமாக இருந்தார். அதோடு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் அவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் பெண்கள் தர்மசங்கடத்துக்கு உள்ளாகினர். இதுபற்றி தகவல் அறிந்த வடக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாக இருப்பதால் பெண்களின் பாதுகாப்பு கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story