குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது


குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாணியம்பாடி - நியூடவுன் இரண்டாவது தெருவில் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் வெள்ளக்குட்டையை சேர்ந்த சந்தோஷ் (வயது 24), பூவரசன் (24), கார்த்திக் (23) ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நியூடவுன் பகுதியை சேர்ந்த தினேஷ் (22) மற்றும் அவருடன் சில நபர்கள் வந்தனர். அவர்கள் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 3 பேரையும் தாக்கினர்.

இதில் காயமடைந்த பூவரசன் (24) வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அவர் கொடுத்த புகாரின் பேரில் தினேசை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story