டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த டெம்போ


டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த டெம்போ
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த டெம்போ

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

கன்னியாகுமரியில் இருந்து தக்கலை நோக்கி நேற்று காலை மீன்லோடு ஏற்றி கொண்டு ஒரு டெம்போ வந்தது. டெம்போவை தக்கலை பகுதியை சேர்ந்த குமார் என்பவர் ஓட்டினார். நாகா்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் வந்தபோது, திடீரென டெம்போவின் பின் டயர் வெடித்து கழன்று தனியாக ஓடியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த டெம்போவில் உள்ள மீன்கள் சாலையில் சிதறி கிடந்தன. மேலும் டிைரவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும், இரணியல் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story