பட்டப்பகலில் ஊருக்குள் நடமாடிய புலி - அச்சத்தில் ஊர் மக்கள்...


பட்டப்பகலில் ஊருக்குள் நடமாடிய புலி - அச்சத்தில் ஊர் மக்கள்...
x

கூடலூர் அடுத்துள்ள புத்தூர் வயல் அருகே இரண்டு நாள்களுக்கு முன்பு பகல் நேரத்தில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

நீலகிரி,

கூடலூர் அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புலி நடமாடியதையடுத்து, புலியை கண்காணிக்க அதிநவீன சென்சார் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள புத்தூர் வயல் அருகே இரண்டு நாள்களுக்கு முன்பு பகல் நேரத்தில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து, புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக அதிநவீன சென்சார் கொண்ட 8 கேமராக்களை பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடிய டி23 புலி உலா வந்த அதே பகுதியில், இந்த புலியை கண்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்


Next Story