ஒரு டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல் 2 பேர் கைது
வாணியம்பாடி அருகே ஒரு டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தினசரி டன் கணக்கில் அரிசி கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில், திம்மாம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், முருகன் மற்றும் போலீசார் அலசந்தாபுரத்தில் இருந்து ஜமான் கொல்லை வழியாக ஆந்திரா செல்லும் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ரேஷன் அரிசி கடத்தி வந்த தும்பேரியைச் சேர்ந்த வெங்கடேசன் (24), செட்டிகுட்டை வட்டத்தைச் சேர்ந்த சேகர் (42) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்., 2 பேர் கைது