ஒட்டு மொத்த தூய்மை பணி


ஒட்டு மொத்த தூய்மை பணி
x

மோட்சவாடி கிராமத்தில் ஒட்டு மொத்த தூய்மை பணி நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மோட்சவாடி கிராமத்தில் ஒட்டு மொத்த தூய்மை பணி நடைபெற்றது. டாக்டர் நந்தினி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வைஜயந்தி மாலா ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை தரக்கூடிய பாத்தினி செடிகள் ஊர் முழுவதும் அழித்தனர், சாலை ஓரங்களில் உள்ள முட்புதர்கள், கழிவு நீர் கால்வாய், மழை காலங்களில் கொசுக்கள் வளரக்கூடிய சின்ன சின்ன குட்டைகள், டயர், ஓடு, தேங்காய் மட்டைகள் அகற்றப்பட்டது.

மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்தனர். டெமிபாஸ் மருந்து தெளிக்கப்பட்டது.

இதில் களப்பணியாளர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 166 பேர் கலந்து கொண்டு பணியை செய்தனர்.


Next Story