மின்கம்பம் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்தது; டிரைவர் சாவு
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மின்கம்பம் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
ராமநாதபுரம்
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சித்தூர்வாடி ஊராட்சி மேலச்சேந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைபாண்டியன் (வயது 48). இவர் மேலச்சேந்தனேந்தல் கிராமத்திற்கு மின்மாற்றி அமைப்பதற்காக சவேரியார்பட்டினம் துணை மின்நிலையத்தில் இருந்து டிராக்டரில் 4 மின்கம்பங்களை ஏற்றி வந்துள்ளார். உப்பூர் அருகே கலங்காபுளி விலக்கு அருகே வந்த போது மின் கம்பங்களை கட்டி இருந்த கயிறு அறுந்தது. இதனால் நிலை தடுமாறி ரோட்டில் அருகே உள்ள பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிரைவர் துரைப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் யேசுதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story