பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது; வாலிபர் பலி


பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது; வாலிபர் பலி
x

அருப்புக்கோட்டை அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார்.

டிராக்டர் கவிழ்ந்தது

காரியாபட்டி அருகே தரகனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவர் கீழக்கரந்தை கிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா அறிவழகன் வீட்டில் தங்கி டிராக்டர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் ரமேஷ், தனது உறவினர் ஆதிசரவணக்குமார் என்பவருடன் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் டிராக்டரில் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு கீழக்கரந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது உடையநாதபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

வாலிபர் பலி

இ்ந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆதிசரவணக்குமார் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இ்துகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ரமேஷ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story