பட்டுக்கோட்டை-காரைக்குடி வழியாக மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும்


பட்டுக்கோட்டை-காரைக்குடி வழியாக  மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும்
x

பட்டுக்கோட்டை-காரைக்குடி வழியாக மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை மனு

பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் நல சங்கத்தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் தெற்கு ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகரம் தமிழ்நாட்டில் 3-வது பெரிய நகரமாகும்.

மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர் சோலை, கள்ளழகர் கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்கள், திருமலை நாயக்கர் மகால் போன்ற சுற்றுலா தலங்கள், சென்னை ஐகோர்ட்டு கிளை போன்ற முக்கியமான இடங்கள் மதுரையில் உள்ளன. மதுரை தென் தமிழகத்தின் முக்கியமான தொழிற்துறை மையமாகவும் வர்த்தக மையமாகவும் உள்ளன.

மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும்

தென்மாவட்டங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதியில் இருந்து மதுரைக்கு நேரடி ரெயில் வசதி இல்லாமல் உள்ளது.

எனவே மதுரைக்கு காலை நேரத்தில் செல்ல மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கு இரு முனைகளில் இருந்தும் ரெயில்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story