பேரையூர் பகுதியில் மழைக்கு மரம் விழுந்தது
பேரையூர் பகுதியில் மழைக்கு மரம் விழுந்தது.
மதுரை
பேரையூர்,
மதுரை மாவட்டம் பேரையூர், டி கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக சாரல் மழையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று பேரையூரில் 57 மி.மீ. மழை அளவு பதிவானது. மேலும் இந்த மழைக்கு காடனேரியை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதை தொடர்ந்து பெரியசிட்டுலொட்டி கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் கோடை விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story