வீட்டின் மீது மரம் விழுந்து பெண் படுகாயம்


வீட்டின் மீது மரம் விழுந்து பெண் படுகாயம்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:45 AM IST (Updated: 14 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் மீது மரம் விழுந்து பெண் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

பந்தலூர்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதை அடுத்து, அதையொட்டி உள்ள நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பிதிர்காடு அருகே ஓடோடும்வயல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரம் ஒன்று சூரியன் என்பவரது வீட்டின் மீது விழுந்தது. மேலும் மேற்கூரையை உடைத்துக்கொண்டு கட்டிலில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. அப்போது அங்கு சூரியன், அவரது மனைவி கமலம் (வயது 45) ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். மரம் விழுந்ததில் கமலம் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சூரியன் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், துணை தாசில்தார்கள் குமார், செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் மரம் விழுந்து சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர். தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் கமலம் குடும்பத்தினரிடம் ரூ.4 ஆயிரத்து 100 நிவாரணமாக வழங்கப்பட்டது.


Next Story