தட்டார்மடத்தில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தட்டார்மடத்தில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தட்டார்மடம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் சூறைக்காற்று வீசியது. நேற்று மதியம் முதல் பலத்த காற்று வீசியதால் மெயின்ரோடு, தெருக்களில் தூசி பறந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் மாலை 3 மணிக்கு வீசிய சூறைக்காற்றுக்கு உடன்குடி-திசையன்விளை மெயின்ரோட்டில் 3 ரோடுகள் சந்திப்புக்கு அருகிலிருந்த பூவரசம் மரம் வேரோடு சாய்ந்தது. உடனடியாக அந்த ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்களும், தட்டார்மடம் போலீசாரும் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த ரோட்டில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Related Tags :
Next Story