கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடந்தது.
கந்திலியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கந்திலி பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.அசோக்குமார் தலைமை தாங்கி கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஒடிசா ெரயில் விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் துரைசாமி, ஒன்றிய துணை செயலாளர் பி.பிரபு, ராஜா, மா.மனோகரன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் பார்த்திபன், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி,
மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் நடராஜன், ராஜேந்திரன், கோவிந்தராஜ் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன், ஊராட்சி மன்ற துணைதலைவர் உஸ்மான், சென்னப்பன், உசேன், அன்சர், முனீர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.