30 ஆயிரம் முட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
வள்ளியூர் அருகே நான்கு வழிச்சாலையில் 30 ஆயிரம் முட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருநெல்வேலி
பணகுடி:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட பகுதிக்கு சுமார் 30 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை காங்கேயத்தை சேர்ந்த சிதம்பரம் (வயது 23) என்பவர் ஓட்டினார். நெல்லை மாவட்டம் பணகுடி-வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் தெற்கு வள்ளியூர் அருகே லாரி நேற்று பகலில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென்று லாரியின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த முட்டைகள் உடைந்து சாலையில் தண்ணீர் போல் பெருக்கெடுத்து ஓடியது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று, விபத்தில் சிக்கி காயம் அடைந்த டிரைவர் சிதம்பரத்தை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பணகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story