கடையின் மீது லாரி மோதி விபத்து


கடையின் மீது லாரி மோதி விபத்து
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கடையின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே பேரூரணியை சேர்ந்த சுப்பையா மகன் பரமகுரு (வயது 38) என்பவர், லாரியில் மணல் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பரமகுரு மற்றும் அந்த வழியாக வந்த நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியைச் சேர்ந்த வேல்சாமி மகன் பிரகாஷ் (23) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் 2 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து நடந்தது காலை நேரம் என்பதால், பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story