சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி
பாச்சலூர் அருகே லாரி ஒன்று சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு பாச்சலூர் அருகே உள்ள செம்பரான்குளத்திற்கு லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. லாரியை பண்ணைக்காட்டை சேர்ந்த ராஜேஷ் (வயது 38) என்பவர் ஓட்டினார். பாச்சலூர்-செம்பரான்குளம் சாலையில் செம்பரான்குளம் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் கிரேன் மூலம் லாரி அகற்றப்பட்டது. இந்த விபத்தால் அந்த சாலையில் சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story